குடி மக்கள்

அடுத்த வேளை சோற்றுக்கு தவமேற்கும் மக்களுக்கு
ஆண்டவன் மணி அடிக்க
கிட்டியதே அதிரச இடைத்தேர்தல்....
கொடுத்த வாக்கை பறக்கவிட்டதால்
பாராளுமன்ற பாரா சூட் திறக்கவில்லை வரிக்குடையை !
காலதேவன் கட்டளைக்கு கடமைபடவே !
குண்டுமணி
போட்டதையா ஓட்டையை சமயம் பார்த்து ....
நடப்புக்கால அரசியல்வாதி
மீண்டும் அரசியல் கச்சேரிக்கு
பலரசப் புட்டியை பரிந்துரைக்க ..
சமுதாய துரோகி சிந்தனைக்கு வந்தது ....
அரிசி பருப்பு வேகாது ...இனி
எரியும் நெருப்பை தண்ணியால் தாக்கு
பதவி மீண்டும் கிட்டும்
ஓட்டுக்கள் தானாக விழும் !
ஐந்தாண்டு திட்டத்தை மீண்டும் தள்ளிப்போடு...
திசை திருப்ப ஆதரவு கேட்காமலே நிரம்பி வழிய
எதிர்பார்த்த ஊர்வலம் எடுத்தாளும்......
சில்லரைக்கு ஓட்டு காணிக்கை
எண்ண எண்ண பெட்டிக்குள் பதுங்குமே ....
குடிமக்கள் குடிமக்களாய் வாய்த்து
ஐந்தாண்டு பிரசவ வலியை
மீண்டும் மௌனமாய் அனுபவிக்க .....!

எழுதியவர் : (31-Aug-18, 8:04 pm)
Tanglish : kuti makkal
பார்வை : 42

மேலே