ஆசான்

          ஆசான்-  புதுவைக் குமார்

ஆசான்கள் மாணவர்களை கல்லாமை புற ஊதா கதிரிடம் இருந்து காக்கும் ஓசோன்கள்.

ஆஜானு பாகுவாய் இருக்கும்
பெரிய பாடத்தையும்
ஜான் வடிவில் விளங்கவைப்பதால் இவர்கள் ஆசான்கள்

வாத்துபோல் இருப்போரையும்
பிறர் வாழ்த்தும்போல் செய்வதால்
இவர்கள் வாத்தியார்

பணக்காரனுக்கு அள்ளிக்
கொடுக்கும் குரு அல்ல
ஏழைக்கு சொல்லிக்கொடுக்கும்
குரு
குருக்கள் இவர்கள்
பூணூல் அணியாது
கையில் பாநூல் அணிந்தவர்கள்

எண் எழுத்து அறிவித்து
நம் கண் கழுத்தை
அறிவின் பக்கம் திருப்பிய வித்து ஆசான்

சிரியாரை பெரியாராகுவதால்
இவர்கள் ஆசிரியர்கள்

புத்தகம் மூலம் புத்தான
அகத்தை நமக்கு அளித்தவர்கள்

அரிவை தெரிவை பின்னால் செல்லும் மாணவர்களுக்கு
அறிவைத் தெரியவைத்தவர்கள்

சுன்னக் கட்டி கொண்டு நம் வாழ்வை வண்ணக் கட்டியாக்குபவர்கள்

கரும்பலகை காட்டி நம்மை கரும்பாக்கியவர்கள்

பாடத்தில் அக்கறை இல்லாதோரைக்கூட ஓடத்தில் ஏற்றி அறியாமை ஆற்றின் அக்கரை சேர்ப்பவர்கள்


மூடம் சொல்லிக்ககெடுப்போர்க்கு
மத்தியில் இவர்கள் பாடம் சொல்லிக்கொடுப்பவர்கள்

அதி காரம் இல்லாது 
இவர் ஊட்டிய அதிகாரம்தான்
அதிகாரம் உள்ள பதவியில் அமர்த்தியர்த்து மாணவனை


கருவறையில் நில்லாது
தாயின் கருவறையில் பிறந்து
 வகுப்பறையில் நிற்கும் தெய்வங்கள்


வணங்குகிறேன் ஆசான்களை

எழுதியவர் : குமார் (31-Aug-18, 8:06 pm)
Tanglish : aasaan
பார்வை : 149

சிறந்த கவிதைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே