என்று வருமோ...
கதிரவனை எதிர்நோக்கிய செந்தாமரையாய்!
பருவமழையை பார்த்திருக்கும் ஏழை விவசாயியாய்!
திருவிழாவை தேடும் கிராமத்து குழந்தையாய்!
பிரசவிக்க காத்திருக்கும் கர்ப்பிணியாய்!
இறைதரிசனம் வேண்டிய பக்தனாய்!
வரம் வேண்டி தவமிருக்கும் முனிவனாய்!
தன்கவிதைக்கு கருதேடும் கவிஞனாய்!
காதலோடு காத்திருக்கிறேன்
என் கண்மணி உனைச்சேர காத்திருக்கிறேன்!
என்னில் உன்னையும்;உன்னில் என்னையும் சுமக்கும் நாம்
தோள்களில் மாலைசுமந்து மணமக்களாய் நிற்க போகும் அந்நாளுக்காக காத்திருக்கிறேன்....!!