காணிக்கை

பருவக் காற்றின் பங்காளி தவமேற்க
வாராத மழையும் தீர்த்து கொட்டியது
தென்னம் பாளை தீர்த்தம் தயாரிக்க.....
இதனால் என்னவோ ...
சாக்கு போக்கு சொல்லாத பக்தன்
கண்களை மூடியவார் காணிக்கைக்கு கடன்பட
அந்தனன் கொடுத்த திருநீற்றை
சுமைதாங்கி நெற்றி அலங்கரித்தது !
பழக்க தோச பல்லவி
எஞ்சியதை நிற்கும் தூணுக்கு
சுண்ணம் பிடிக்க...
கொடிமரக் கணக்காயர் நற்சான்றிதழ் எழுத ....
மூலச்தான மூர்த்தி
திடுக்கிடும் தகவலை அசிரியாக விளக்குகிறார் .....
இன்று போய் நாளை வா !
நன்னீராட்டு விழா பண்ணிரு ஆண்டு வருவதை கணக்கில் வை ....
அன்று
மேலிருந்து விழும் பூவும்
கலச நீரும்
உன் திறமையை சோதிக்கும்
அன்னாந்து பார்
அனைவரையும் முட்டி மோதி !
காணிக்கை கை நழுவியே !

எழுதியவர் : (31-Aug-18, 7:34 pm)
Tanglish : kaanikkai
பார்வை : 27

மேலே