மச்சானே கேளாயோ
ஓய் மச்சானே கொஞ்சம் நில்லு.
நான் சொல்லுவதை நீயும் கேளு.
நானோ உன் பக்கம் அமர்ந்து
வெட்கப்பட வேணும் பட்டு
மெத்தையோடு தலையணையும் தேடு../
கொட்டும் அருவியில் குளித்த
என் உடலோ தங்கத் தேரு.
தங்கிய குளத்தில் பறித்த அல்லி
கொண்டையிலே நீயும் நுகரு. /
சந்தன வாடை மேனியைத் தடவு.
கரு மையிட்ட கண்ணை நோக்கு.
கர்வம் கொண்ட உன் மனதை
அவைகள் தாக்கும்
உள் மனதினிலே தாகம் ஒன்று
ஏதோ உன்னைக் கேட்கும் ./
என் சின்ன இதழ் சிவக்கவில்லை
நச்சு என்று இச்சு ஒன்று கொடுத்து விடு
மையல் இட்ட ஆசையிலே
மோகம் என்னும் மொய் எழுதி விடு./
நெற்றியிலே முத்துப் போல்
வியர்வையை அழைத்து விடு.
முத்தத்தால் நாணத்தை உடைத்து விடு.
தடுக்க வரும் கரத்துக்கு ஊரைக் கூட்டி
பச்சைக் கல் பதித்த பொன்
ஒன்று மாட்டி விடு .
உன் இச்சையை பின்னாடி
காட்டி விடு./
இடை தேடும் சேலைக்கு
விடைகொடுத்து விடு.
உடையாய் நீயும் மாறி விடு.
போட்டவையெல்லாம் காதில்
கேட்டாயோ.? மச்சானே காத்திருப்பேன்.
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரையாய்
திறக்காத உன் மார்பில் எனக்காக
இடம் ஒன்று ஒதுக்கி விடு /