ஜன்னல் ஓரத்து கனவு

ஜன்னல் ஓரத்துக் கனவும்
ஜனனம் அற்றுப் போனதே
நெஞ்சோடு வளர்த்த கற்பனை
மாய மாக மறைந்ததே .

நித்தம் பார்த்த முகம்
யுத்தம் செய்து போனதே
பித்தம் கலைந்த இதயம்
மஞ்சம் அற்றுப் போனதே.

சொர்க வைத்த சொந்தம்
சொந்தம் இன்றி போனதே
சொல்லொன்னாத் துயரம்
உள்ளத்தில் அமர்ந்ததே.

ஜன்னல் ஓரம் மோதும் காற்றும்
ஏதோ சொல்லி விட்டுப் போகிறதே
ஜன்னல் ஓரக் கனவு
தெருவோடு பிரிந்ததே.

நீ மீண்டும் வருவாய் என்று நோக்கிய கண்கள் தினமும் ஏமாறுகின்றதே
ஜன்னல் திரை நீக்கி பார்த்த
கரங்கள் விழி நீர் துடைக்கின்றதே.

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (2-Sep-18, 2:11 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 170

மேலே