என்னவளின் நினைவுகள்
மறைக்க தெரியா
உன் நினைவுகள்
என் இதயத்திற்குள்
சிறை பட்டு கிடக்க
உன் முகம்
என் கண்களில்
இருந்து இன்னும்
விலகவில்லை
நீ வெகு
தொலைவில் இருந்தாலும்
என் இதயத்தின்
சிறகுகள்
இன்றும் தேடுதே
உன்னை தினமும்
அறியா பருவத்தில்
அன்று
நீ கொடுத்த
சமிக்ஞ்களை எல்லாம்
தவற விட்டேனடி
கால மாற்றத்தில்
நம் குடும்பங்கள்
இரு தீவுகளாய்
கிடந்தாலும்
நம் மனம்
ஒன்றாய் தானே சுற்றுதடி
உந்தன் நினைவுகள்
என்றுமே கணக்கவில்லை
மூச்சு காற்றாய்
இன்றும் என்னுள்
நீ
உயிர் வாழ்வதால்
அதனால் தான்
வலிகளும் தெரியவில்லை
இன்று வரை
சிறு வயதில்
சிலேட்டில் உன் பெயரை எழுதி
அழித்த
அந்த தருணங்கள்
உந்தன் நினைவுகளை
மீண்டும் நினைவூட்டியது
இன்று பரணில் அதை
துடைத்த போது
தெருவில் விளையாடிய
அந்த நாட்களில் என்றும்
எனக்கு ஆதரவு கொடுத்தாய்
எந்த சம்பந்தமும் இல்லாமல்
உந்தன் முகத்தை
தேட ஆரம்பித்த
அந்த நாள் முதல்
இன்றும்
தேடி கொண்டிருக்கிறேன்
ஆற்று நீரில் ஓடி கொண்டிருக்கிறேன்
எதிர் நீச்சல் போடாமல்
கடலில் கலந்து
கரை ஒதுங்கட்டும்
காத்து கொண்டு இருக்கட்டும்
என் ஆன்மா
இன்னுமொரு உலகத்தில்
என்னவளை
சந்திப்பதற்கு ...........................