முதல் காதல்
உச்சி முகர்ந்து
நெற்றி சுருண்டு
வியர்வை பொங்க
கண்கள் பணித்து
உன் சுவாசகாற்றை சுவாசித்து
நா வறண்டு
வாய் குளறி
முகப்பொழிவு கண்டு
என் உள்ளம்
உன் அழகு கண்டு
விக்கி விதர்த்து வியர்த்து
கைகள் உனை கட்டி அனைக்கனும்
என்று நினைக்க
கால்கள் நடுநடுங்க
உடலே படபடக்க
உயிரே
உனை எனையாக நினைத்து
என் உள்ளமும் உடலும்
உனை சுமந்த நாெடியே
என் முதல் காதல்
அன்பு சகியே...