நீ நான் இரவு
கண்கள் இரண்டும் பேசிக்கொள்ள
இதயம் இரண்டும் துடிக்க மெல்ல,
வேர்வை மழை சொட்டச்சொட்ட,
உன்னை நான் நெருங்கும் போது
காமம் வாராதோ?
பாய்மரத்தில் கப்பல் கட்டி
பாவை உந்தன் இடையை தட்டி
கட்டியணைத்து முத்தம் இட்டால்
காமம் தீராதோ??
வெண்ணிலவை மேகம் மூட,
அலைகள் வந்து மணலை கூட,
உன்னுடன் நானும் ஒன்றாய் சேர,
இரவின் நேரம் இன்னும், கொஞ்சம் நீளாதோ??
நரேன்.