சான்றிதழ்

மண்ணுக்குள் மன்னிப்பு கேட்பவன்
மானிடனாய் வலம் வரும்போது
சிறுதுளி வருத்தப்படவில்லை.....

போட்ட வேடத்தை நிஜம் என்று கருதி
பொய் கால் குதிரைக்கு மண்டியிட்டு
நாழிகை நரையை உறுதிபடுத்தியதால்
ஔடத கர்த்தா நீட்டினார் அங்க நளிவுகளை...
காலனுக்கு கடன் பட்ட
கணக்கு வழக்கு தரகர் எடுத்தாள..
நித்திய தாம்பூல சமாச்சாரம்
வாய் பொத்தி வேர்வை வழிக்க
இலவச தேனிலவு கால்கோல் விழா பரிசல் காணுது ...
இதனைக் கண்டு....
இள வாரிசு சிரிக்கிறது
கால் மேல் கால் போட்டு...
மருத்துவர் சொகுசாய் சொறுகிய ஊசி
தடம் புரண்டதால்..
மண்கண் விளைந்த மரமும் மண் சட்டியும்
தவம் களைத்து
மஹா ராஜாவை தனிக் காட்டு முற்றத்தில் பயனிக்க
மாற்றுச் சான்றுதல் வழங்கியது
உயில் மேல் ஆசை கொண்டு !

எழுதியவர் : (4-Sep-18, 12:06 am)
Tanglish : saanrithazh
பார்வை : 72

மேலே