பிறப்பு

நட்ட நாற்றுக்கு நா இருந்தால்
கேட்கும் .....
நான் வாடினால் ஒழிய
நீ ......... தண்ணீர் ஊற்ற மாட்டாய் !
வள்ளல் வாய் மொழியறிந்தும்
இனி ....
வருத்தப்பட வாய்ப்பில்லை ......
பிறகென்ன ,,,,,
வேண்டியவார் கனி காய்க்காவிடில்
இராசயண மாந்தீரிகத்தை.....
பட்டுவாடா செய்திடுவாய் நாசுக்காக !

எது எனக்கு தேவையோ
அதை கேட்டறிய
ஏது உமக்கு கால நேரம் !
உமக்கு கடமை முக்கியம்....

என் மூச்சு சூட்டைக் கண்டே
கார் மேகம் கரையும் ...
என் தாகம் தீர்க்க.......
பட்டினி பட்சிகள் பட்டியலிட
வண்டுகள் விருந்தோம்பல்
வார்த்தெடுக்கும் பஞ்சமிலா தேனமுதம் ..

சுமைதாங்கி நான் கல்லடி பட ...
நீயோ !
அலை மோதுகிறாய் அவசர உலகில்
நிம்மதி துறந்து !
ஒன்று கூறட்டுமா .....
உமக்கு வேண்டியதை
வேண்டிய அளவிற்கு தேடிக்கொள் !
மதிகெட்டு நிம்மதியை தொலைத்துவிடாதே !
உன் சோகம் என் குற்றமாகாது !
பிறர் பலி ஏற்கும் பிறப்பு எனதன்று !

எழுதியவர் : (4-Sep-18, 12:50 am)
Tanglish : pirappu
பார்வை : 45

மேலே