மறந்து போகிறாய் மனிதா

வாழ்க்கை வழித்தடத்திலே வழிபோக்கனாய்
நகர்ந்து போ மனிதா !
எதுவும் உனது இல்லை என
உணர்ந்து போ மனிதா !
உன் கரம் தேடிய பொருள் கூட
ஒருநாள் உன்னை கைவிடும் எனில்
இழப்பதற்கு ஒன்றும் இல்லை
என யதார்த்தம் புரிந்து போ மனிதா
முடிவில்லா பயணம் என விரைந்து போகிறாய் மனிதா !
என்றேனும் முற்றுபெறும் என மறந்து போகிறாய் மனிதா !

எழுதியவர் : புதுக்கவி (4-Sep-18, 7:21 pm)
சேர்த்தது : puthukavi2016
பார்வை : 165

மேலே