யார் குற்றம்- சிரிக்க, சிந்திக்க

(முந்தைய நாள் டாஸ்மாக்கில் குடித்து விட்டு போதையில்
வீடு திரும்பிய கணவன் , சாப்பாடு கேட்க, மனைவி மறுக்க
போதையில் தாறு மாறாக பேசி அடித்தும் விட, அவன் பிள்ளைகள்
அவனை கட்டி இழுத்து போலீஸ் கு ஒப்படைக்க, லாக்அப் இல் இருந்து
மத்தம் நாள் காலையில் போலீஸ் விசாரணை)

போலீஸ் இன்ஸ்பெக்டர்: ஏனய்யா , என்ன குத்தம் செய்ஞ்சங்க தெரியுமில்ல
இப்படி தரக்குறைவா காரியம் செய்யலாமா ......?


அவன் (லாக் அப் இல் அடைக்கப்பட்டவன்) : நான் எப்படி இங்க ........
ஒன்னும் புரியலையே.............நான் என்ன தவறு செய்ஞ்சேனுங்க

போலீஸ் : டாஸ்மாக்கில் குடித்துவிட்டு மனைவியை வீட்ல துன்புறுத்தியதா
உங்க மகன் இரண்டுபேர் குற்றம் சாட்டி இருக்காங்க ......இதுக்கு
என்ன சொல்லுவீங்க .......

லாக்கப் நபர் :: ஏங்க, குடிப்பது குத்தமுனா ஏங்க குடிக்க சொல்லி
கடை திறந்து வெச்சி இருக்கீங்க....நீங்க அரசாங்கம்
கொஞ்சம் ஜாஸ்தியா குடிச்சுப்புட்டேன் போல ,
போதைல ஏதோ செய்ஞ்சுட்டேன் போல .......
இது என் குற்றமுன்னா , லாபம் நோக்கி குடி விப்பதுமே
குத்தமுங்க..........

போலீஸ் ( தலையை சொறிஞ்சிகிட்டு.... ஒன்னும் சொல்ல முடியாம)

சரி , இனமே மனைவியை துன்புறுத்தாம குடிக்க
கத்துக்க............... இப்ப நீ போகலாம் வீட்டுக்கு ...!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Sep-18, 2:51 am)
பார்வை : 177

மேலே