ஃபைன் ஃபைன்தான்

(சைக்கிளில் வந்துகொண்டிருக்கும் நம்மாளிடம்...)

"நிறுத்து... நிறுத்து.....ஓரமா வா..."

"எதுக்கு சார்...?"

"கேரியர்ல என்னய்யா ஹெல்மெட் வச்சிருக்க.... பைக் எங்கே..?"

"அய்யா.. எங்கிட்ட பைக்கெல்லாம் இல்லீங்க... எனக்கு பைக் ஓட்டவும் தெரியாதுங்க...ஹெல்மெட் கீழே ரோட்ல கிடந்துச்சுங்க...அதான் எடுத்துட்டு......"

"யோவ்... இந்தக் கதையெல்லாம் இங்க விடக்கூடாது..... நாங்க ரொம்ப கறாரான போலீஸ் தெரியுதா.."

"அய்யா...உண்மையதாங்க சொல்றேன்.....!"

"இங்க பாருய்யா... ஹெல்மெட் இல்லாம வண்டி ஓட்டிட்டு போனாலும்...வண்டி இல்லாம ஹெல்மெட் வச்சுகிட்டு போனாலும்.... ஃபைன் ஃபைன்தான்... புரியுதா..... நீ ஒன்னு செய்... சைக்கிளையும், ஹெல்மெட்டையும் இங்க விட்டுட்டு, பைக் எடுத்துட்டு வந்து வாங்கிக்கோ..."

"அய்யா.....அய்யா...!!!?????"

எழுதியவர் : உமர்ஷெரிப் (3-Sep-18, 11:55 pm)
பார்வை : 259

சிறந்த நகைச்சுவைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே