பூரண மதுவிலக்கு
"என்னடி.... இன்னைக்கி ரொம்ப சந்தோசமா இருக்கிறே....என்ன விசேஷம்...?"
"அதுவாக்கா.... நேத்து வரைக்கும் குடிகாரரா இருந்த என் வீட்டுக்காரர்... இன்னைக்கி மதுவிலக்கு வேணும்ணு எல்லார்கிட்டயும் கையெழுத்து வாங்கிட்டு, தலைவர்கிட்ட மனு குடுக்க போயிருக்காரு... அதான்கா இப்படி...!!?"
"அடியே லூசு... அந்த கண்றாவிய நானும் பார்த்தேன்....அது மதுவிலக்கு இல்லைடி.... பார்ல ஒரே இருட்டா இருக்குதாம்... வெளிச்சத்துக்கு.... மதுவிளக்கு வேனுமாம்....உன் புருஷனாவது திருந்துறதாவது....!!!"