இழப்புகள்

இழப்பை சந்திக்காத மனிதன் இருக்க மாட்டான் இழப்பை சந்திக்காதவன் மனிதனாகவே இருக்க மாட்டான்...... இழப்புகள் என்பது வெறும் பொருள் இழப்பு மட்டும் இல்லை எத்தனையோ இழப்புகள் உள்ளன அவை உயிராகவும் இருக்கலாம் இல்லை பொருளாகவும் இருக்கலாம் ......

ஒரே ஒரு நிமிடம் இந்த பதிவு கொஞ்சம் போர் அடிக்கக்கூடியதாக இருக்கலாம் அதனால் நான் முதலிலே சொல்லிவிடுகிறேன்.... இழப்புகளை சந்தித்திராத மனிதர்கள் (என எண்ணிக்கொள்பவர்கள்)அல்லது இழப்புகளை சந்திக்க விரும்பாத மனிதர்கள் மட்டும் இதை படிக்கவும்....


ஒன்றை இழக்காத வரை அதன் மதிப்பு பெரும்பாலும் அனைவருக்கும் தெரிவது இல்லை.... இழந்தவர்களுக்கு மட்டும் தான் இழந்ததை பற்றின வலி வேதனை தெரியும்..... இவ்வாறு கூறுவது சரியா? கண்டிப்பாக இது தவறே !!! இவர்களும் ஒன்றை இழப்பதற்கு முன்பு அதன் மதிப்பை உணராதவர்களாகவே இருந்திருப்பர்...... இவ்வாறு கூறினால் யாருக்கு தான் இழப்பின் அருமை இழப்பதற்கு முன்பு புரியும் ?? இதற்கு பதில் -- *எதையும்* அலட்சியமாக எண்ணாமல் இருந்தால் அதுவே போதுமானது......

காலத்தின் மதிப்பு அதை இழந்ததிற்கு பிறகே தெரியும்...
மதிபெண்ணின் மதிப்பு அதை இழந்தபிறகே தெரியும்...
மனைவியின் மதிப்பு அவரை இழந்த பிறகு தான் சிலருக்கு தெரியும்....
அதே போல தான் அதிக மனைவிகளுக்கும்...
தண்ணீரின் மதிப்பும் அதை இழந்த பிறகு தான் தெரியும்....
காதலின் மதிப்பும் அதை இழந்த பிறகே தெரியும்...
அதே போல தான் காதலித்தவர்களின் மதிப்பும் அவர்கள் இல்லாத (இழந்த)போது தான் பெரும்பாலோருக்கு தெரிய வருகிறது.....
இதே போலத்தான் அனைத்து உறவுகளும் மற்றும் செல்வங்களும் பிறவையும்.......

இவைகளை இழந்த பிறகு வருந்தும் நாம் ஏன் ? அவர்கள் அல்லது அவை நம்மிடம் இருக்கும் போது அவற்றின் மதிப்பை உணர்ந்துகொள்ளாமல் இருக்கிறோம்....அவற்றை உணர்ந்தால் என்ன நடக்கும்??

சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவவரும் இழப்புகளை சந்தித்து கொண்டு தான் இருக்கிறார்கள்... இழப்புகளை சுமையாக எடுத்துக்கொள்பவர்களும் இருக்கிறார்கள் சுகமாக எடுத்துக்கொள்பர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்......

வாழ்க்கையில் இழப்பு வருவது என்பது எதார்த்தம் ஆனால் இழப்பையே நினைத்து வாழ்க்கையை இழந்துவிடுவது வருத்தம்.. எடுத்துக்காட்டாக காதலர்களில் ஒருவர் இறந்துவிடுவது எதார்த்தமாக நிகழும் ஒரு இழப்பு... ஆனால் அதே இழப்பை நினைத்து வாழ்க்கையை இழந்துவிடுவது வருத்தம் தரக்கூடிய செயலாகும்...

எனவே எந்த இழப்பு நேரிட்டாலும் அதை தைரியமாக தாங்கிக்கொள்ளும் உள்ளத்தை கட்டமைக்க வேண்டும்.. அது பொருள் இழப்பாக இருந்தால் அதை சரிசெய்யும் வழிமுறைகளை செய்ய வேண்டும் ஒரு வேளை அது உயிர் இழப்பாக இருந்தால் அதிலிருந்து மனதை வெகு விரைவில் வெளியே கொண்டு வர முயல வேண்டும்...... எந்த இழப்பிலும் முடங்கிபோய்விடக் கூடாது...

எங்கும் துணிவு
எதிலும் துணிவு
எங்கும் முயற்சி
எதிலும் முயற்சி
எங்கும் வெற்றி
எதிலும் வெற்றி
என வீறுநடை போட வாழ்த்துக்கள்🙏🙏

எழுதியவர் : ச.ஜெரோம் சகரியா (5-Sep-18, 12:46 pm)
சேர்த்தது : ஜெரோம் சகரியா
பார்வை : 204

மேலே