யாருடன் போவது

புதிர்கள் நிறைந்த இந்த
பூமியில் பெண்ணென்ற
பூவாக பூர்த்து -- புன்னகையின்றி
புண்பட்டு தவிக்கும் என்
புரியாத புலம்பலை
இங்கு எடுத்துரைக்கிறேன்...

வாலிபம் என்ற வசந்த நாட்களில்
கண்களால் கண்ட போது
நீ கவர்ந்தாயென்று
ஒருவன் என்னை பின்தொடர்ந்து வந்தான்!
முதன்முதலாய் ஒருவன் வந்து
என்னிடத்தில் பேச -- ஏதும்
பேசமுடியாமல் ஏனோ
நானும் தவித்தேன்!
அதனை எண்ணி சிந்தித்தேன்....

அன்பிற்கும் ஆதரவிற்கும்
மட்டுமே அடிமையாகும்
சதைகொண்ட இதயம் -- சில சமயங்களில்
நேசத்திற்கும் அடிமையாகும்!

நேசிக்கிறேன் என்று
நெருங்கி வந்த அவனிடத்தில்
நெஞ்சத்தை கொடுக்கத் துணிந்தேன்


நேரம் போவது தெரியாமல்
நெடுநேரம் பேசினேன்...

அவனிடத்தில் அதிகம் பேசிக்கொண்டே
சூழ்நிலைகளை மறந்து நின்றேன்...

சூழ்நிலைகளை மறந்து நின்றவள்
அன்றுதான்
என் மனம் தவித்து
உண்மை புரிந்தேன் -- அவனிடத்தில்
என் நிலையை அறிந்தேன்!!

சூழ்நிலை அறியாமல்
அவனை சுற்றி வந்தவளின்
சுதந்திரத்தை மறுத்தான்...

சாதாரனமாக பிறரிடத்தில்
பேசினாலும் சந்தேகப் பார்வையில்
என்னை பார்த்தான்....

அன்று அழகில்
உன்னிடத்தில் என்னை
தொலைத்தேனென்றவன் -- இன்று
அவனின் ஆணவத்தில்
என்னை அடிமைப்படுத்த நினைத்தான்!!

திருமணமாகி காலங்களை
கடக்கும் முன்னே
காயங்களில் கண்ணீர் வழிய வைத்தான்

ஊடல் உருவானது
அதில் என் உண்மைகாதல்
சருகானது -- உள்ளத்தை
நேசிக்க தெரியாதவன்
உறவுகளை முறித்துக்கொண்டு
உன்னை வெறுக்கிறேன் என்றான்!!

பெண்ணின் மனதை
மதிக்க தெரியாதவனிடம்
மதி இழந்து
மனதை கொடுத்ததை நினைத்து
என்னை வெறுத்தேன்

அழுது கொண்டும்
என்னை அழித்துக்கொண்டும்
வாழ்ந்து வந்தேன் -- அழித்துக்கொண்டு
வாழ்ந்த போதும்
அழியாத அவனின் நினைவுகள்
சில நேரங்களில் வந்து போனது!!

நினைவுகள் வந்து செல்வது
வாடிக்கைத்தான் -- அதனோடு
நான் வாழ்ந்த என் வாழ்க்கையை
வாசித்துப்பார்த்தேன்!!

சிறகுகள் கொண்டு
பறந்து சென்றவள் -- தானே
ஒரு சிறையை அமைத்துக்கொண்டு
அதில் சிக்கிக்கொண்டு
என்னை சிதைத்துக்கொண்டேன்!!

அழகின் விளைவு
ஆபத்தென்று அறிந்து
என் அழகை அழித்து வாழ்ந்தேன்

உலர் கூந்தலுடன் உறவாடி
உண்மையில் பல நாட்களானது...

தலைவாரி பூச்சூடி
பல வாரமானது...

நெற்றியில் திலகமிட்டு
நீண்ட மாதமானது...

பொன் சிரிப்புகளில்
பறந்து திரிந்தவள்
பாலைவனத்து பச்சைக்கிளியாக
நிழலாட நிம்மதியை
தேடி அலைந்தேன்...

வாழ்வின் சந்திப்பில்
ஆயிரம் நபர்கள் வருவர் போவர்
அதில் சில உறவு
வளர்வதும் வழக்கம் -- அவர்கள்
நம்மை தொடர்வதும் வழக்கம்!

அந்த கட்டத்தில்
இன்னொருவன் என்னை தொடர்ந்தான்

சித்திரம் இழந்த
சிறிய விழியில் இவன்
சிதறி விழுந்தேன் என்றான்!

சின்ன குரல்வளைவில்
சிக்கி தவிக்கிறேன் என்றான்

உரிமையான உன் பேச்சில்
உண்மையில் உன்னை
காதலிக்கிறேன் என்றான்!!

நான் கடந்து வந்த
பாதையைக் கண்டு -- காதல் என்றாலே
பயம் கொண்டவள் ! இவன்
கண்களின் பாசத்தில்
மீண்டும் பரவசம் கொண்டேன்!!

சதையால் சூழப்பட்ட
என் இதயம்
சத்தியம் இவனை ஏற்கமுடியுமா ? என
எண்ணி துடித்தது!!

ஆணவம் கொண்ட
அவனைப் போன்று -- இவன்
அன்பும் சாயம் இழக்குமா ?
என்று காத்திருந்தேன் ! இவனின்
அன்பு சாயம் இழக்கும் முன்னே-- சில
மாற்றத்துடன் என்னை இழந்தேன்!!

அன்பில் என்னை இழந்தப்போதும்
இவன் ஆதரவாகவே இருந்தான்!
ஆயிரம் வருத்தங்கள்
இயத்தோடு இருந்தாலும்
இவன் வரும்போது -- அது
இருக்கும் இடம் தெரியாமல் போனது!!

இவன் மடியில்
தலைவைக்கத்தான் இத்தனை
இன்னல்களா என என்னுள்
பல முறை கேள்விகளை எழுப்பினேன்!!

முதல் காதலை
முழுவதுமாக அவனிடத்தில்
எடுத்துரைத்தேன் -- முரண்பட்ட
காதலுக்காக உண்னை வெறுப்பதா? என
என்னை தேற்றினான்!!

விருப்பங்களில் கொள்ளை கொண்டு
இவனின் விரல் பிடிக்கும்
தருணத்தில் -- வேண்டாமென்று
விட்டு விலகி சென்றவன்!
நீ வேண்டுமென்று
வழிமறித்து நிற்கிறான்!!

நினைவுகளால் அழிக்கப்பட்டவன்
நிஜமாக முன்வந்து
நிற்கிறான்!!

சந்தேகத் தீயில்
என் தேகத்தை எறித்தவன் -- நிரந்தரமாக
நீ தேவையென்று
தேடிவந்து நிற்கிறான்!!

முழுவதுமாக வெறுப்புக்கொண்டு
'நீ" வேண்டாமென்று
விலகிச் சென்ற அவன் -- கட்டாயம்
நீ வேண்டுமென்று
ஒரு பாதையில் எதிரே நிற்கிறான்!!

விருப்பத்தால் கொள்ளைக் கொண்டு
விடமல் அன்பை தந்த
இவன் -- விரல் பிடிக்க வேண்டுமென்று
எதிர்பார்த்து மறுபாதையில் நிற்கிறான்!!

பாதைகள் இரண்டாக உள்ளபோது
பாதங்கள் யாருடன் போவது ??
என தெரியாமல்! பயணத்தை
தொடராமல் தனிமை தீயில்
என்னை எரித்துக்கொண்டிருக்கிறேன்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (8-Sep-18, 6:19 pm)
Tanglish : yarudan povathu
பார்வை : 749

சிறந்த கவிதைகள்

மேலே