தனிமை
எங்கோ ஓர் இடத்தில்
ஒற்றை மரத்தடியில்
காற்றின் அசைவில்
இசைத்துளி சலசலப்பில்
ஏதோ ஓர் நினைவில்
இமைகளின் இறுக்கத்தில்
கண் தூங்கும் நேரத்தில்
எதையோ தேடினேன்
என் இதயத்தையும்
தாண்டி ஓடினேன்
கடந்து செல்ல செல்ல
என்னை வந்து
கட்டியணைக்கிறது
தனிமை....!!!