என்னவளே

காலந்தோறும் உன் அன்பை நான் சுவாசிக்க வேண்டும்
வாழ்வதானால் உன் அருகினில் வாழ வேண்டும்...
இல்லையேல் சாவதானால் உன் அருகினில் சாக வேண்டும்...
சோகம் என்னும் கடலுக்குள் மூழ்கிய என்னை
வாழ்க்கை என்னும் ஆனந்த கரையில்
வாழ வைக்க போராடுபவனே
உன் அன்பினில் என் தாயை காண்கிறேன்..
உன் கண்டிப்பில் என் ஆசானை பார்க்க்கிறேன்..
என் கஸ்டத்தில் தோள் கொடுக்கும் போது
ஒரு நல்ல நண்பனை காண்கிறேன்.
என்னோடு சண்டை பிடிக்கும் போது
உன்னை குழந்தையாய் காண்கிறேன்

எழுதியவர் : முருகன்.M (20-Aug-11, 2:10 am)
சேர்த்தது : முருகன் . M
Tanglish : ennavale
பார்வை : 344

மேலே