பொது நலவாதி அல்ல.
அனைத்திலும் நிறைந்த நீ
காலம் முழுக்க உன் அன்பு எனக்கு மட்டும்தான் என்று
விண்ணப்பத்தில் கையொப்பம் வாங்கிட
என் மனம் நினைப்பது உண்டு...
கையொப்பம் எல்லாம் எதற்க்கு
உன் பாசம் என்னும் சொத்தை
எனக்கு உயில் எழுதி தந்த பிறகு
இதெல்லாம் எதற்க்கு..
ஆனாலும் நீ எனக்கு தந்த சொத்தை
மற்றவர் அனுபவிக்க விட
நான் ஒன்றும் பொது நலவாதி அல்ல.

