பல்கி

வாய்யா துணை இயக்குநரே, உனக்கு மூணு மாசம் கால அவகாசம் கொடுத்தும் வடக்கிருந்து ஒரு அழகான பையனை அழைச்சிட்டு வரமுடில.

பல்கி கம் ஹியர்.

யாரைய்யா பல்லுக்கி பல்கி?

அய்யா அவுரு பேரு பல்கிராம். திரைப்படத்தில அவுரு பேர 'பல்கி'-ன்னு போடணுமாம்.

வாய்யா பல்கி.

நமஸ்தேஜி.

உம். வணக்கம்.

இந்தப் பல்கியோட பின்புலத்தபத்திக் கொஞ்சம் சொல்லுய்யா தஸ்கின் தங்கராசு.

அய்யா இவரு பெரிய கோடீஸ்வரரோட ஒரே மகன். தமிழ் ரசிகர்கள் நடிகர்களை தெய்வமாக் கொண்டாடறதக் கேள்வி தமிழ்ப் படத்தில நடிக்க வந்திருக்காரு. அஞ்சே வருசத்தில சூப்பர் ஸ்டார் ஆகிட்டு இந்திப்பட உலகுக்குப் போயிடுவாராம். இவரே படத்தின்
தயாரிப்பாளாராம். மற்றதெல்லாம் நாம பாத்துக்கணுமாம்.

சரி, சரி. நம்ம தமிழ் ரசிகர்களுக்கு தமிழப் தப்பா உச்சரிக்கறங்களத்தான் பிடிக்கும். நான் பல்கிகிட்ட சில சொற்களச் சொல்வேன். அத அவுரு உச்சரிக்கணும். நான் நெனக்கற மாதிரி பல்கி உச்சரிச்சா படப்பிடிப்பை இப்பவே துவக்கிடலாம். நான் சொல்லறதைத் திருப்பிச் சொல்லுய்யா பல்கி.

(துணை இயக்குநர் பல்கியின் காதில் ஏதோ முணுமுணுக்கிறார்.

சரி. ஆரம்பிக்கலாம். உலக நாயகன்

உல்கா நாயக்

இளைய தளபதி

இள்யா தல்பத்

இளைய திலகம்

இள்யா திலக்

புரட்சி நடிகர்

புராச்சி நாடிகார்

நடிகர் திலகம்

நட்டிகா திலக்.

சிலப்பதிகாரம்

ஷில்பத்கார்.

பொதும்யா. உன் உச்சரிப்பை தமிழ் ரசிகர்கள் நல்லா ரசிப்பாங்க. சூப்பர் ஸ்டார் ஆகுணும்னா நீ புதுவிதமான குரங்கு சேட்டையெல்லாம் உன்னோட நடிப்பிலே காட்டணும். உன்னே அஞ்சே வருசத்தில் துனியா சூப்பர் ஸ்டார் ஆக்கிக்காட்டறேன். டேய் அழகப்பா இந்த புதுமுக நாயகனை ஒப்பனை அறைக்கு அழைச்சிட்டு போ. அரை மணி நேரத்திலே பூசையோட படப்பிடிப்பை த் தொடங்கணும்.

சரீங்க அய்யா.

எழுதியவர் : மலர் (11-Sep-18, 1:04 am)
சேர்த்தது : மலர்91
Tanglish : palgi
பார்வை : 118

மேலே