எல்லாம் எழுதிய எட்டையபுரத்தார்

முப்பத்தொன்பதை முடிக்காமலேயே
முடிந்து போனாலும்
எழுத இன்னும் எதுவுமில்லை
என்னும் அளவிற்கு
எல்லாம் எழுதிய
எப்போதும் வென்றான்...
எட்டாத புகழ் எட்டிய
எட்டையபுரத்தார்...
பாட்டுகொரு புலவன்
மகாகவி பாரதியின்
நினைவு நாள் இன்று...

இன்னும் அறுபத்தொன்று
வாழ்ந்திருந்தால்
என்னவெல்லாம் எழுதியிருப்பாரோ...
அவர் எண்ணமெல்லாம்
சொல்லியிருப்பாரோ...

மகாகவி பாரதியின்
அநீதி எதிர்க்கும் அனல் வரிகளும்
மனிதம் நேசிக்கும் அமுத வரிகளும்
ஒட்டுமொத்த உலகிற்கு
அவர் வழங்கிய
ஒப்பற்ற கொடை...

பாரதியின் பாடல்கள்...
ஆவேச அக்னி வளர்த்தாலும்
அழகாய்ப் பூக்கள் சொரிந்தாலும்
படிக்கிற போதெல்லாம்
கொதிக்கிற மனங்களையும்
குளிர வைத்துப் பார்க்கும்.. அறிவை
ஒளிர வைத்துப் போகும்...

ஒளி படைத்த
கண்ணினாய் வா வா வா...
உறுதி கொண்ட
நெஞ்சினாய் வா வா வா...
உனது பாடல்கள்
எல்லாவற்றிலும் வாழ்கின்ற
பாரதியே... மரணம் உனக்கு
என்றும் இல்லையே...

எல்லோரும் ஓர்குலம்
எல்லோரும் ஓரினம்
எல்லோரும் இந்நாட்டு மன்னர்...
சமத்துவ சமுதாயம் கண்ட
பாரதியின் புகழ்... புவி
உள்ளளவும் வாழும்...
👍🙏🌹

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (11-Sep-18, 9:54 am)
பார்வை : 268

மேலே