என்னவன் பாரதி

என்னவன் பாரதி

தமிழன்னையின்
தவப்புதல்வா..!!!

புகழின்
புகலிடமே...!!

புல்லரிக்கும்
பைந்தமிழே..!!!!

கவியால் இப்புவியை
ஆண்ட புவியரசே!!!

நின் கவிப்புலமை கண்டு
இங்கு யாம் வியந்தோம்!!

கவிப்பேரொளியே!!!

நீ வாழ்ந்த காலத்தில்
உமை யாரும் இங்கு
உண்மையாய் உணரவில்லை...

உண்மையாய் உணர்ந்த
பொழுதினில் இங்கே உன்
உயிரெனும் உளி இல்லை....

உமை காணும் பேறு
பெற்றவரில்
யாம் இல்லை!!

உனை பட்டினி போட்ட இந்த சமூகத்தின் பாவத்தின் தொடர்ச்சியாய் நானும் இங்கே...
வெட்கப்படுகிறேன்..
எங்களை மன்னிக்க வேண்டுகின்றேன்..

உமை கட்டி அனைத்து
உம் மடி கிடந்து கவி கேட்க துடிக்கிதே
என் மனம்..

தமிழையன்றி
யாதொன்றும் அறியா
தயாநிதியே...

காக்கை சிறகினில்
கண்ணனை கண்ட
காவியத்தலைவனே...

அழியா கவியே..
அமர கவியே..
எம் பாரதியே..!!

மரணம் இல்லையடா உனக்கு
மகா கவியே..

இங்கே திக்கறியா
திரியும்
இளைய சமுதாயத்திற்கு
இங்கொரு பாரதி
இக்கணமே வேண்டும்....

மீண்டு வா...!!
மீண்டும் வா..!!

எழுதியவர் : ஸ்ரீராம் காஷ்யப் (11-Sep-18, 3:51 pm)
சேர்த்தது : Sriram Kashyap
Tanglish : ennavan baarathi
பார்வை : 139

மேலே