கடுதாசி

விலாசத்தை விவரமா கேட்டதனால்
விடுபட்ட சொந்த பந்தம்
வீட்டைதேடி வந்துவிட்டது ....
கடல் கடந்து கடுதாசி
சிரஞ்சீவியின் சேமம் விசாரித்து !
மூன்று தலைமுறை
விட்ட குறை..... தொட்டகுறை
பூர்வீக சொத்து ...
எப்பவோ கேட்டிருக்க .....
முப்பாட்டனுக்கு எழுப்ப வேண்டும் ...கல்லரை !
இப்ப இருப்பதுவோ ஒரு பங்காளி .....

பத்து சென்டு பாலாய் போச்சு ..
பிறகேது நாளு தென்னை பரப்பு மேல.....
வந்து பாகப் பிரிவினை பண்ணிட்டா ...
பட்டா கிடைத்திடும் ...பத்துகாசு நீட்டிட....
பஞ்சாயத்து இல்லாமலே !

கிராமத்து கோயிலிலே ஒரு பூசை செய்ய ..
முப்பாட்டன் பெயருக்கு ,,,பதினைந்து செலவாகும் !
முன்னின்று பண்ணிட்டால் முடிந்துவிடும் காரியம் !
கோயில் பூசாரிக்கு தட்சணை ..
பலிபீடம் முன் நிற்க ...எட்டாகும் !
மூலச்தானம் முன்னிற்க பதினெட்டு செலவாகும் !
முன்பே சொல்லிட்டேன் ...முன் பணம் கொடுத்திடனும் !

நஞ்சையும் புஞ்சையும் நல்லா விளைந்திருக்கு ...
விருந்தாளிக்கு விருந்து கொடுக்க !
நம்பிக்கைக்கு பாத்திரமா ....
நான் காத்திருக்கேன் ....வரப்புமேல...
வரவை எதிர் பார்த்து !
தவறாமல் வந்திடனும் ....
செலவை எல்லாம் ........சரிகட்ட .....
மறு கடுதாசி கிடைத்தவுடன் !

எழுதியவர் : (11-Sep-18, 11:22 pm)
பார்வை : 170

மேலே