ஐங்கரனே துணை
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...!
கரமது ஐந்து கொண்டவனை
கணபதி யென்னும் பெயரோனை,
புரமது யெரித்தோன் புதல்வன்தனை
பேழை வயிற்றுப் பரம்பொருளை,
உரமது நெஞ்சில் தருபவனை
ஊர்தியாய் மூஞ்சுறு உடையவனை,
சிரமது குட்டிப் பணிந்திடுவோம்
சிறப்பெலாம் தருவான் விநாயகனே...!