முதல் சகி

வானவில்லும்
மண் வாசமற்ற
மழைநாள்

கொஞ்சம் பனி
கொஞ்சம் மழை
சிறிது காற்று
கொண்டு கனவாகி
மறைகிறாய்

நூறாவது முறையாக
உனை வெறுக்கிறேன்
மீண்டும் நேசிப்பதற்கு,

உனது சிறந்த
பெயர்சொல்லி
நான்....

முதல் சகியே
தினமும் பேசுகிறாய்.

எழுதியவர் : கோபிரியன் (13-Sep-18, 5:14 am)
சேர்த்தது : கோபிரியன்
Tanglish : muthal sagi
பார்வை : 62

மேலே