காதல்
செம்பவள இதழ்களுக்குள்
முத்துச்சிப்பி , இதழ்கள் அலர்ந்தன
சிப்பியும் அலர்ந்ததே , அங்கு
முத்துப்பற்களாய் -பவளமும் முத்தும்
ஒருங்கே மலர்ந்ததே என்னவள்
சிங்கார சிருங்கார சிரிப்பாய்
அந்த ஆழ்கடலில் மூழ்கி எழுந்தேன்
பார்த்தேன் என்னவள் முகம்
கலங்கரை விளக்கமென என்மீது
ஒளி வீசி என்னைக்கரை சேர்ந்ததே
காதல் கரையெனும் கடற்கரை.