பூக்களின் அதிகாரம்

பூக்களுக்கு ஒரு புத்தகம்
வெளியிட நினைத்தது தோட்டம்
அதிகாரங்களை
அகர வரிசையில் வெளியிடவா
அழகு வரிசையில் வெளியிடவா
வாச வரிசையில் வெளியிடவா ?
வாசமில்லா மலர்களுக்கு ....?
அகரமா அழகா ....?
என்று யோசித்திருந்தது !
பூந் தோட்டமே ஒரு புத்தகம்
அதற்கொரு புத்தகமா என்றேன் !
நீ யார் என்று கேட்டது தோட்டம்
பூக்களைப் பறிக்காதே ரசி எனும்
கவியினம் என்றேன் !
அப்படியானால் நீ சொல்வதுதான் சரி
என்றது புத்திசாலிப் பூந்தோட்டம் !

பூக்களை ரசி பறிக்காதே
என்ற பலகையை நாட்டினான் தோட்டக்காரன் !

எழுதியவர் : கவின் சாரலன் (13-Sep-18, 8:25 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : pookalin athikaaram
பார்வை : 87

மேலே