எழுதுகிறான்
எழுதுபவன் மிகப்பெரிய முட்டாள்
முதலில் கடவுளை எழுதினான்
பின்பு இறைதூதர்களை எழுதினான்
இப்போது நாத்திகம் எழுதுகிறான்
அவ்வப்போது “ஸ்பைடர் மேனையும்” எழுதுகிறான்
யாருக்கு தெரியும் ஒருவேலை
ஒரு பெரிய அழிவிற்கு பின்
உலகில் ஒரு குழந்தையும் இந்த ஸ்பைடர் மேன் படைப்பும்
மட்டும் மிஞ்சினால் அந்த குழந்தை ஸ்பைடர் மேனையும் கூட
கடவுளாக வணங்கலாம் .
இறை நிலையை தேடச் சொன்னால்
இறைவனை மட்டும் தேடும் முட்டாள் உலகம் இது.
காதல் அற்ற காதலியுடன் வாழ்ந்தால் எப்படி இருக்கும்
அப்படி இருக்கிறது இந்த உலகின் இறைநிலை.
உண்மையில் காதலி அழிந்தாலும் காதல் அழிவதில்லை
இறைவன் இல்லை எனினும் இறைநிலை மறைவதில்லை
அன்பே இறைநிலை
அன்பை மறந்த நாத்திகமும் குப்பையே
அன்பை மறந்த ஆத்திகமும் குப்பையே
உண்மையில் சொன்னால் குப்பையில் கூட அன்பு முளைக்கிறது
குப்பையில் தான் சில மலடிகள் தாயாகிறார்கள்
அவர்கள் கருவறையில் தான் அன்பு பிறக்கிறது