பெண்ணே
தேன் சிந்தும்
இதழ் கொண்டு
இனிதாக
பேசிடுவாய்...
விழி வேலில்
எனை தாக்கி
உன்
கவனம்
ஈர்த்திடுவாய்...
உன்
திருவதனம்
மயக்கத்திலே
எனை
நானே
மறந்திருப்பேன்...
வண்டுகள்
அலைகின்றன
உன்
புன்னகையை
காண
தேன் சிந்தும்
இதழ் அல்லவோ...
செவிமடல்
குழல் ஆட
பேசும்
சிலையாக
நிற்கின்றேன்...
பூவான
உன் தேகம்
தவழ்ந்திட
தென்றாலாக
விரும்புகிறேன் ...
ஆண்டவனின்
படைப்பினிலே
அத்தனையும்
அழகுதான்
உன்னை
படைத்ததிலே
தெரிகிறது
பிரம்மனும் கலைஞன் தான்...
எத்தனை
நெளிவுகள்
உன் மெய்யிலே
சித்திரமும்
வரைய கற்றவன்
போல...
சிலிர்க்கிறது
என்
நெஞ்சமும் கூட
சிறகிருந்தால்
பறந்திருப்பேன்
பிரம்மனை காண
நன்றிகள்
சொல்ல...
இத்தனையும்
படைத்த
இறைவனுக்கு
எகத்தாளம் தான்
கட்டுகோப்பாக
இருக்க வேண்டுமாம்
ஆண்களெல்லாம்...
புவி மேலே
பிறந்ததினால்
பேரார்வம்
உன் மேலே
பேதை என
ஆகிவிட்டேன்
பெண்ணே
நீ
இல்லை எனில்
எனக்கு என்ன
இங்கு
வேலை...