ஆணிகளை அப்புறப்படுத்துங்கள்
ஆணிகளை விதைக்கிறீர்கள்.
நீங்கள் விதைத்துச் சென்ற ஆணிகளை நான் தேடி எடுத்து கவனமாக அப்புறப்படுத்திக் கொண்டிருந்தேன்.
யாருடா இந்த பைத்தியக்காரன் என்றீர்கள்.
பிச்சைக்காரன் என்றீர்கள்.
நம்பிக்கை வைத்த சிலரே வார்த்தைகளால் என்னை துளைக்க நம்பிக்கை வைப்பதில் தவறு செய்து விட்டேனோ?
ரோஜா மலர்களைத் தேடிப்பிடித்து பறிக்கும் கையெல்லாம் முட்கள் குத்தி சிவந்துவிட்டது போல, இதயப்பூர்வமாக நேசிக்கச் சிலரைத் தேடும் போது அனைவரும் இதயத்தில் ஆணியை அறைகிறார்கள்.
இரத்தம் வழிகிறதோ? இல்லையோ? இதயம் வலிக்கிறது.
நேசிக்க அருகதை அற்றவர்களை எதற்காக நேசிக்கிறாய் என்கிறது?
கேட்டும் திருந்துகிறேனா?
இல்லையே,
நல்ல மனங்களைத் தேடுகிறேன்.
அங்கே ஆணிகளை அவர்கள் வார்த்தைகளால் தயாரித்து வைக்கிறார்கள்.
சிறிதும் சமந்தமில்லாமல் காயப்படுத்துகிறார்கள்.
காயப்பட்ட இதயம் அனைத்தையும் வெறுக்கிறது.
சரிதான் போங்கடா,
நீங்களும் உங்க வாழ்க்கையும் என்றே இதயமும் திட்டுகிறது.
அதற்காகச் செத்துப் போகலாமா?
இயேசுவை சிலுவையில் ஆணிகளால் அறைந்தீர்கள்.
நான் இயேசு அல்ல.
சாமானியனாக நீங்கள் இதயத்தில் விதைக்கும் ஆணிகளை அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
சத்தியமேவசெயதே...