நீயானால்

நீ விடையானவனா?
ம்ம்....
நீ வினாவானதால்

நீ அழகானவனா?
ம்ம்....
உன் கண்ணாடியில் விழுந்த பிறகு

என்னை கொஞ்பவனா?
ம்ம்....
உன் குழந்தை தனத்தை மட்டும்

எனக்கு முத்தம் கொடுப்பாயா?
உன் காமத்தை மறைத்து வைத்துக்கொள்
தருகிறேன்

நீ பொய் சொல்லுவாயா?
உண்மையை கண்ட பிறகு,
உன்னை போல் உன்மை அழகை கண்ட பிறகு
எப்படி பொய் சொல்லாமல் இருப்பது

நான் அழுதால்?
அழ விடுவேன்...அழுத பின் சிரிப்பேன்
ஆறுதல் எல்லாம் சொல்ல மாட்டேன்

நான் சிரித்தால்?
அசிங்கமாக நானும் சிரிப்பேன்

நான் வேலைக்கு போனால்?
நான் கால் நீட்டி தூங்குவேன்.

கல்யாணம் வேண்டாம் என்றால்?
உன் அருகில் இருக்க
சான்றிதல்கள் எனக்கெதுக்கு என்பேன்

காதல் வேண்டாம் என்றால்?
இந்த கவிதையை கசக்கி போடுவேன்.

வேண்டும் என்றால்?
இன்னும் நிறைய அசிங்கமான கவிதைகள் எழுதுவேன்.

எழுதியவர் : மெ.மேக்சின் (14-Sep-18, 7:36 am)
சேர்த்தது : Maxin
Tanglish : neeyanal
பார்வை : 255

மேலே