பறக்கும் முத்தம்
ஈக்கள் கூட்டமாய்
மானிட பதர்கள் ..
இரைச்சலிடும்
ஆள்கடத்தி வாகனங்கள் ...
வாய்மொழி
வழக்கொழிந்து
சைகை பாஷை
சத்தமாய் பூத்துக்கிடந்த
அந்திவேளையில்
யாருக்கும் சிக்காமல்
என்
கன்னத்தில்
ஒரு இச் சத்தம்
திரும்பி பார்த்தால் ...
தொலைவிலிருந்து
அவள் விட்ட
பறக்கும் முத்தம் ...!