பியாஸ் நதி BEAS RIVER
உயர்ந்தோங்கிய ஹிமாலயத்தின்
பாய்ந்தோடும் பியாஸ் நதியே
ஷிவாலிக்கின் செல்ல மகளாய்
இடம் வலமாய் மேடு பள்ளமுமாய்
தடம் பதித்து நடம் புரிவாய்.
பியாஸ்குந்தில் நீ பிறந்தாய்.
சோலங், மணாலி மடி தவழ்ந்தாய்
மண்டியிலே நடை பயின்றாய்
பஞ்சாபில் குடி புகுந்தாய்.
ஹிமாச்சலின் நாயகியே
பஞ்சாப்பின் மருமகளே
பாதி நாள்பனிமூட
மீதி நாள் .கரைந்தோட
காண்போற்கு கவிதை நீ
ஹிமாச்சலின் ஆப்பிளும்
பாஞ்சாலத்தின் கோதுமையும்
உன் கொடையன்றி வேறில்லை.
பாறைகளூடே படகுப்பயணம்
முகடுகளூடே வடம் சறுக்கு (zipline) சவாரி.
சங்கு கழுத்தை அலங்கரித்து
மங்காத வளமும் சேர்த்து
பாங்காய் பாய்ந்தோடும்
பியாசென்னும் அழகுப்பெண்ணே
உனக்கு நிகர் வேறில்லை
**********************************************