வா தாசு
![](https://eluthu.com/images/loading.gif)
ஏன்டி காத்தாயி...
என்னயக்கா?
நம்ம ஊருப் பையன், அதான் அந்த பொன்னாகனோட பேரன் தாசன்...
அவனுக்கு என்னாச்சு?
அவுனுக்கு ஒண்ணும் ஆகல. படிச்ச பசங்கெல்லாம் அவன 'தாசு, தாசு' (தாஸ்)ன்னு கூப்புடுவாங்க.
ஆமாம். அதுக்கு இப்ப என்னயக்கா?
அங்க அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியப் பாரு. ஒரு மோளம் அடிக்கற ஆளு ஒரு தேநீர் தம்ளரைக் கையில வச்சுட்டு 'அரே ஒசூரு வா தாசு சொல்லுங்க'ன்னு சொல்லறாரு.
அதென்னமோ நான் என்னத்த கண்டேன்.
இல்லடி. நம்ம தாசுப் பையம் பேரு அந்த மோளகார ஆளுக்கு எப்பிடித் தெரியும்? ஒசூருன்னு வேற சொல்லறாரு. "வா தாசு"ன்னு சொல்லச் சொல்லறாரு.
இரு யக்கா. அந்தத் தாசுப் பையன் வந்தா அவனையே கேப்போம்.
நீ சொல்லறதும் சரிதான்டி காத்தாயி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
திரைத் தமிழைத் தவிர்ப்போம். தமிழைச் சீரழிவிலிருந்து காப்பது கற்றோரின் கடமை.