தேனீர்
தேனீர்..
புத்துணர்ச்சிக்கு
புகழ் பெற்ற
நீ
மென்மையான
இதழ்களையும்
காயப்படுத்தி விடுகிறாய்
சில நேரங்களில்
எத்தனை முத்தங்களை
பெற்று விடுகிறாய்
சில நிமிடங்களில்
ஆசைக்கு
உகந்த நீ
ஆயுள் முழுதும்
துணையாக
இறவா
வரம் பெற்ற
இனிப்பான
சுவை நீ
உன்னிடம்
காதல் கொண்டு
காத்திருப்போர்
வரிசையில்
நானும் உண்டு....
🍵🍵🍵🍵🍵
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
