புகைப்படக் கருவி

பளிச்செனப் பட்டொளித்து
பார்ப்போரைப் படம்பிடித்து
கிளிக்கென சத்தமிட்டு
கருஞ்சுருளில் காட்சியிட்டு
ஒளிப்படம் உண்டாக்கி
உருவத்தை உள்ளபடி
வெளிப்பட வைக்கின்ற
விஞ்ஞானப் பெட்டகமே

எழுதியவர் : நாகேந்திரன் (17-Sep-18, 10:17 am)
சேர்த்தது : நாகேந்திரன்
பார்வை : 233

மேலே