நாகேந்திரன் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f4/aqwho_45462.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : நாகேந்திரன் |
இடம் | : விருதுநகர் |
பிறந்த தேதி | : 30-Mar-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Sep-2018 |
பார்த்தவர்கள் | : 119 |
புள்ளி | : 13 |
தமிழ் -ஆங்கிலம்
ஊனோடு ஒட்டிய தோல் -தமிழ்
உடல் ஓட்டும் சட்டை -ஆங்கிலம்
தோல் உரித்தால் ஆயுள் மிஞ்சுமோ
சட்டை இல்லையேல் சங்கடம் தான் வருமோ
கழுத்தோடு ஒட்டிய சிரம் -தமிழ்
சிரத்திற்கிடும் தொப்பி - ஆங்கிலம்
சிரம் வெட்ட உயிர் மிஞ்சுமா
தொப்பி இல்லைஎனிலும் தப்பில்லையே
அண்டம் காணும் கண் -தமிழ்
அது மேல் அணியும் கண்ணாடி -ஆங்கிலம்
அண்டம் காணும் கண்போனால் பிண்டம்தானே
கண்ணாடி இல்லையென்றாலும் கைத்தடி உண்டல்லவோ
இவளை தமிழில் பெண் என்று
அழைக்கிறோம்
இதனை ஆங்கிலத்தில் பென் என்று
அழைக்கிறோம்
இருவருமே பிறர் தலை நிமிர
தன் தலை குனிபவர்கள்
இவள் தாலிக்கு
இது தாளுக்கு
இருவருக்கும் மை தேவை
இவளுக்கோ கண் மை
இதற்கோ பேனா மை
துணையின் கரம் பிடித்தே
இருவரின் வாழ்க்கையும் நகர்கிறது
பேனாமை குறைந்தால்
இருவரும் அழிகின்றனர்
இருவருமே ஆண்களின் நெஞ்சில்
இருப்பவர்கள்
பயன்படாத பொது இருவருமே
தூக்கி எறியப்படுகிறார்கள்
குழந்தை வளர்ந்து ஆகிறது பெண்சிலை
பேனாவின் குழந்தைதான்
என்று மழலையிடம் கொடுப்பது
பென்சிலை
அன்று அருக்காணி என்று அழைக்கப்பட்டவள்
அன்று எழுத்தாணி என்று
அழைக்கப்பட்டது
இருவரும
பளிச்செனப் பட்டொளித்து
பார்ப்போரைப் படம்பிடித்து
கிளிக்கென சத்தமிட்டு
கருஞ்சுருளில் காட்சியிட்டு
ஒளிப்படம் உண்டாக்கி
உருவத்தை உள்ளபடி
வெளிப்பட வைக்கின்ற
விஞ்ஞானப் பெட்டகமே
மணம் காெண்ட பந்தம்
மனம் விட்டு தடுமாறி
வேறு மனம் சிறை பிடித்து
மறுமண ஆசை காெண்டு
காதல் என்ற பாேர்வைக்குள்
மாேகம் காெள்ளும் மனங்கள்
சின்னச் சின்ன ஆசைகளால்
சிந்தைகளை சிதறடித்து
உறவுகளை உதறி விட்டு
பிரிந்து பாேகும் மாயம் என்ன?
மண வாழ்வின் வரமான பெற்ற பிள்ளை கூட
முறையற்ற உறவுக்கு முட்டுக்கட்டை என்று
உயிர் பறிக்கத் துணிந்த மனம்
சிந்தை இழந்து பாேகும் மயக்கம் என்ன?
மனதை தீண்டும் மயக்கம்
காதல் என்ற ஆசை காட்டி
உடல் மீது மாேகம் காெண்டு
உண்மை உறவுகளைக் கூட
உயிர் குடித்துப் பாேகிறது....
ஏன் இந்த மயக்கம் சில மனங்களுக்குள்
சிந்தை தெளிந்த பின் நாெந்தழுவதை விட
காதல் மயக்கமது சிந
......ஆசிரியர் மாயம்.....
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
நும் கரங்கள் எதுவும் கொடுக்கவில்லை
எம் கரங்கள் எதுவும் எடுக்கவில்லை
பரிமாற்றம் எதுவும் நிகழாமல்
படிக்கச் செய்த மாயமென்ன ?
கொடுக்கக் குறையா கல்வியும்
அள்ளக் குறையா அறிவையும்
உயர்வை கொடுக்கும் ஒழுக்கமும்
ஒருங்கே கிடைத்த மாயமென்ன
கரும்பலகையில் எழுதி கணப்பொழுதில்
கச்சிதமாக அழித்த பின்னும்
மனதில் வந்து பதிவதற்கு
மாயம் ஏதும் செய்தீரோ
விதைகளை நீங்கள் விதைத்துவிட்டு
விளைச்சலை எமக்கே விட்டுத் தரும்
உயர்ந்த உள்ளம் உமக்கன்றி
உலகில் இங்கே யார்க்குண்டு
வகுப்பறை விட்டு போனபின்னும்
எம் செவிகளில் ஒலிப்பது நும்குரலே
பதிவே இல்லா என் மனதில
ஊரில் உள்ளார் உறவு முறையார்
உடன் பிறந்தார் உயிர் நட்பார்
நேரில் வந்தார் நேசம் பொங்க
நிகழும் திருமண நிகழ்வை நடத்தித்
தேரில் ஊர்வலம் தெருவில் நகர்த்தி
திரும்பும் திசைகள் திருவிழா காட்டி
மாரில் தொங்கும் மஞ்சள் கயிறிட
மங்கல மொழிகள் முழங்கின எங்கும்.
- நாகேந்திரன்
வெள்ளிவரும் வேளையிலே விடியாத காலையிலே
துள்ளிவரும் மங்கையவள் துயிலாமல் கண்விழித்து
பள்ளியறை விட்டெழுந்துப் பெருக்கத்தைக் கைபிடித்து
தள்ளித்தள்ளிக் குப்பைகளைத் தனியிடத்தில் சேர்த்துவைத்து
அள்ளியள்ளி நீர்தெளித்து அடுத்தமுறை துடைத்துவிட்டு
புள்ளிவைத்துக் கோலமிட்டு பிள்ளையாரைப் பிடித்துவைத்து
கிள்ளியெடுத்தப் பூச்செருகிக் கதிரவனைக் கரங்குவித்து
உள்ளத்தால் வரவேற்க உதித்ததுவே பொற்காலம்.
ஆர்ப்பரிக்கும் ஆழ்கடலில் அலைஅலையாய் அணிவகுக்கும்
நீர்ப்பரப்பின் மேலுதித்து நிலமெங்கும் கால்பதித்து
தேர்ப்புரவி துள்ளிவர செங்கதிர்கள் சிதறிவிழப்
போர்த்திருக்கும் பச்சைவண்ணப் புல்வெளியில் பனிபறக்க
சோர்ந்திருந்த பறவையினம் சுறுசுறுப்பாய்ச் சுற்றிவர
ஊர்ப்புறமும் காலடிகள் உலவுவது கேட்கலையோ
ஈர்த்திழுக்கும் இருவிழிகள் இளைப்பாற நேரமில்லை
வார்த்தெடுத்த பொன்சிலையே விழிதிறந்து எழுவாயே
==========================
வாக்காளன் தெய்வமாவான்
௦௦
கடத்தல்காரன் தோழனாவான்
௦௦
கொலைகாரன் குடும்ப அங்கத்தவனாவான்
௦௦
எதிர்கட்சிக்காரன் துரோகியாவான்
௦௦
ஊழல் நீ ஆட ஊஞ்சலாகும்
௦௦
வஞ்சகம் வசமாகும்
௦௦
பொய்கள் தேவ வாக்காகும்
௦௦
ஒலிவாங்கி உயிராகும்
௦௦
உன்னைச் சுற்றி எப்போதும்
வெட்டிக் கூட்டம் இருக்கும்
௦௦
வாக்குறுதி வழங்குவதில்
உன்னை மிஞ்ச எவனும் இல்லை
என்பதை நீயே உணர்வாய் .
௦௦
நன்றி மறப்பாய்
௦௦
சுயநலம் விரிவடைய
பொதுநலம் பேசுவாய்
௦௦
பழைய சோற்றுக்கே
வகையற்ற நீ
ஐந்து நட்சத்திர ஹோட்டலில்
சிற்றுன்றிக் கேட்பாய்.
௦௦
செய்தித்தாள்களில்
பட்டம் செய்து பறக்கவி
வண்டி யோட்டி ஓய்வெடுக்கும்
வண்டிக் காரர் வாழ்க்கையிலே
அண்டிப் பிழைக்கும் அவலமில்லை
அலைந்து பெற்ற கடனுமில்லை,
பண்டிகை மற்றும் பிறநாளும்
பார்வைக் கவர்க்கே ஒன்றேதான்,
உண்டே உழைத்துபின் உறங்குவதால்
உளதே வாழ்வில் அமைதியொன்றே...!
கண்ணில் படுவதிலும்
கற்பனை தொடுவதிலும்
கருவாகி நின்றாய் - என்
எண்ணம் முழுவதிலும்
எழுத்தில் விழுவதிலும்
உருவாகி நின்றாய்
பச்சைக் குழந்தைப்
பார்வை மாெழியில்
இச்சை கூட்டிப் பாேனாயே-என்
இதயம் கூட்டிப் பாேனாயே
- நாகேந்திரன்