விடியும்பொழுது
வெள்ளிவரும் வேளையிலே விடியாத காலையிலே
துள்ளிவரும் மங்கையவள் துயிலாமல் கண்விழித்து
பள்ளியறை விட்டெழுந்துப் பெருக்கத்தைக் கைபிடித்து
தள்ளித்தள்ளிக் குப்பைகளைத் தனியிடத்தில் சேர்த்துவைத்து
அள்ளியள்ளி நீர்தெளித்து அடுத்தமுறை துடைத்துவிட்டு
புள்ளிவைத்துக் கோலமிட்டு பிள்ளையாரைப் பிடித்துவைத்து
கிள்ளியெடுத்தப் பூச்செருகிக் கதிரவனைக் கரங்குவித்து
உள்ளத்தால் வரவேற்க உதித்ததுவே பொற்காலம்.