பெரியயார் சாமி
குனிந்து நின்றவர்களை துணிந்து நில் என்றே சொன்ன தனிப்பெரும் தலைவரே !
கடவுள் வெறுப்பு கொள்கையை கையில் எடுக்கவில்லை.
நீ கடவுள் மறுப்பு கொள்கையை தான் கையில் எடுத்தாய்.
கடவுள் இல்லை என்றதில்லை நீ ஏனென்றால் இருப்பதை தானே மறுக்க முடியும்.
காசிக்கு சென்றாய் கடவுளைக்காண.
பசிக்கு சோறு கேட்டாய் பார்ப்ப(வ)ர்கள் கூடுமிடத்தில்
கடவுளை கையால் தொடுபருக்கே உணவு என்றான்.
நானும் தொடுபவன் என்றே நான்குபிடியில் நல்மனதில் நூல் அணிந்தே பேசாமல் உள் நகர்ந்தாய்.
பேசியது உன் மீசை நீ கடவுளை கையால் தொடுபவன் அல்ல கருணையால் தொடுபவன் என்றே.
புறந்தள்ளப்பட்டாய் சிவனே அயினும் சிரம் தாழ்த்தாதே என்றே கடவுளை கல்லிலும் கடுந்தீயிலும் சாஸ்திரம் சொல்லி சாடுபவர்களை மறுத்தாய்.
கடவுளை காரணமாக்கி சாஸ்திர சம்பிரதாயங்கள் பெயர் சொல்லி சாடி நின்ற மூடர்களுக்கு சாட்டையடி நீ.
வந்தவனே கதியென நிற்க
வந்தவனோ விதியாலே விரைந்து செல்ல
விதவை என்றே விறகடிக்கி சதியில் ஏற்றிய சாத்திரக்கார்கள் மேல் ஆத்திரம் கொண்டே பகுத்தறிவால் தனி பாத்திரம் செய்தாய் .
வண்ணங்களில் சேரவில்லை கருப்பு .
நீ அணிந்ததால்
மனித எண்ணங்களில் சேர்ந்தது கருப்பு.
வருணாசிரமத்தால் வாடி நின்றோர்க்கெள்ளாம் தஞ்சம் தரவே உன் நெஞ்சம் தொட்டது
உன் தூய தாடி .
பாரில் பலரும் அறிந்திடவே பகுத்தறிவை தொகுத்து தந்த பாமரர் போற்றிடும் பகலவன் நீ.
எத்தனை யுகங்கள் ஆகினும்
என்றும்
எங்களின்
பகுத்தறிவின் பரம்பொருள் நீ.
நீயோ பெயரிலே இராமசாமி.
நாத்திகர் பலருக்கும் நீயே பெரிய சாமி.
சுட்டித்தோழி சுபகலா