எங்கேனும் கேட்பேனோ
திருக்குவளை முத்துவேலர்
ஈன்றளித்த முத்தமிழே ! எங்கள்
மூத்த தமிழே ! பல்கலையில் வித்தகரே !
உன் நாவிசையில் செந்தமிழின்
இன்னிசையை இனியான்
எங்கேனும் கேட்பேனோ ?
இடியென முழங்கிடும் உன்
கரகர குரலில் காந்தத்தமிழின்
குழலிசையை ! இனியான்
எங்கேனும் கேட்பேனோ ?
வங்கக்கடலில் காற்றசைவில் !
அலையசைவில் !
இனியும் யான் கேட்பேன் !
பழந்தமிழின் இன்னிசையை ! அங்கேஎம்
பழுந்தமிழே நீ துயில் கொள்வதால் !...