என் பொன்னான போர்வை
இந்த இருள் வழியும் இரவில் என் தேகம் தீண்டுகிறாய்
இந்த நீர் உறையும் குளிரில் என்னை கதகதப்பாக வைக்கிறாய்
என் உறக்கம் அற்ற இரக்கம் இல்லாத இரவுகளில் என் பேச்சை சலிக்காமல் ரசிக்கிறாய்...
என் தேகம் முழுதும் பரவும் உன் அணைப்பில் துயிலும் எனை காக்கும்
பொன்னான போர்வையே உனக்கு என் நன்றிகள்....