காத்திட வாரீர்

வீசும் தென்றலில்,
பயிர் துடித்து
அழகு கண்ட பூமியில்,
இன்று வீறும் ஆயுதத்தால்
உயிர் துடிக்க கண்டோம்.
அன்று மண்ணைக்கீறி
பொன் விதைத்தோம்.
இன்று எண்ணங்களை கீறி
இரத்தத்தை விதைக்கிறோம்.
மனங்களைஆண்டோம் அன்று.
பிணங்களை ஆளுகிறோம் இன்று .
வினைகளை விதைத்து
விளைந்த கண்ணீரில்,
பாதி மூழ்கிவிட்ட
இந்தப் பார் எனும் கப்பல் ,
காப்பாற்ற யாருமின்றி,
கணிசமாய் தள்ளாடுகிறது