பெண்மையே

பெண்ணே,
உன்னை பூ
என்று சொல்லாதே,
வாடிப் போவாய்.

புயல் என்று
சொல்லாதே,
கடந்து போவாய்.

நதி என்று
சொல்லாதே,
ஓடிப் போவாய்.

நாணல் என்றும்
சொல்லாதே தலை
கவிழ்ந்து போவாய்.

பின் எதற்கு
ஒப்பிடுவது
என்கிறாயா?

உனக்கு ஒப்பானது
என்று எதுவுமில்லை.
உன்னை பெண்
என்ற சொல் .

உனக்குள் இருக்கும்
தகுதிகள் ஆயிரம் என்று
இந்த பூவுலகம் அறியும் .

புனைபெயர்கள்
உனக்கெதற்க்கு !

புதுமை நீ.
பொங்கிடும்
தாய்மை நீ .

புகலிடம் நீ.
பூமியின்
வழித்தடம் நீ.

பெண்மையே!
நீ என்றும்
வாழ்க.!!!!!!

எழுதியவர் : பிரின்சஸ் ஹாசினி (18-Sep-18, 2:46 pm)
சேர்த்தது : Princess Hasini
Tanglish : penmaiye
பார்வை : 98

மேலே