முயன்றால்

முயன்றால்.....

வானம் கைக்கெட்டும் தூரம்தான்,
வாழ்வில் வசந்தங்கள் இருந்தால்.

நாளைய வாழ்வு நம் கையில் தான்,
வழி எங்கும் வாசல் இருந்தால்.

நட்சத்திர கிரீடம் கூட
நம் சிரசில் தான்.
எண்ணங்கள் ஈடேறினால்.

சொர்க்கம் கூட பக்கத்தில் தான்,
சுகங்களெல்லாம் சொந்தமாகிப்
போனால்.

முடியாதது ஒன்றுமில்லை.
நாம் முயற்சி செய்தால்.

ஆனால்.....

இருட்டல்லவா
இங்கே இளமையை
ஆண்டு கொண்டிருக்கிறது .

மனிதனுக்கும், மனதிற்கும்,
சம்மந்தம் இல்லாமல்,

மூளை உறங்குகிறது.
நம் மூச்சும் தாலாட்டுகிறது...!?

எழுதியவர் : பிரின்சஸ் ஹாசினி (18-Sep-18, 2:53 pm)
சேர்த்தது : Princess Hasini
Tanglish : muyandral
பார்வை : 117

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே