என் அன்பு அம்மா
உயிரை திரியாக்கி,
உதிரத்தை எண்ணையாக்கி,
ஊன் விளக்காக நின்று ,
தேவைகள் எனும்
திரேக மர இலைகளை
உதிர்த்தாய் அம்மா... உன்
வசந்தத்தை தொலைத்தாய் .
உன்னை பட்டு போகச்
செய்து எனக்காக,
எல்லாம் விட்டுக் கொடுத்தாய் ,
என் உயிரின் உயிரே!
நான் இதற்கு என்ன
கைமாறு செய்வேன் .?
இந்த பூமியை உன்
காலடியில் வைத்தாலும்
அம்மா, உன் மாசற்ற
அன்புக்கு ஈடாகாது.
பாதம் பணிகின்றேன்
தாயே! உன் பரிவான
பார்வையிலேயே
என்றும் நான் இருக்க
வேண்டுகிறேன்.......
பாசமலர் ஆக
என்றென்றும்
நெஞ்சில் பதிந்துவிட்ட
நேச மலராக......!