முரண்பாடுகள்

உயிர் வளர்க்கும்
பயிர்கள் மத்தியில்
உடம்பு எரிக்கும்
மேடை...

ஆறுகளின்
வழித்தடத்தில்
அழிவுக்கேற்ற
அமிலத் தண்ணீர்....

உயர்ந்த மனிதன்
கோபுரத்தில். உயர்த்திய
குடிமகன் வீதி
ஓரத்தில்.....

பெற்றவள் இருப்பது
ஓலைக் குடிசை, பிள்ளை
அயல்நாட்டு ஆடம்பர
வாழ்வில்.....

ஏனிந்த முரண்பாடு?
உத்தம கேள்விகளுக்கு
சத்தியமாய் பதில்
இல்லை இன்று......

எழுதியவர் : பிரின்சஸ் ஹாசினி (19-Sep-18, 11:34 am)
சேர்த்தது : Princess Hasini
பார்வை : 77

மேலே