ராஜராஜ தந்திரி -ஷெரிப்
"தலைவரே....தலைவரே..."
"என்னய்யா... ஏன் இப்படி ஓடி வர்றே... என்னாச்சு...?"
"உங்க மகன்...உங்க மகன்..."
"என் மகனுக்கு என்னய்யா ஆச்சு... சீக்கிரம் சொல்லித்தொலை..."
"ஒன்னும் ஆகலீங்கய்யா...அவரு எதிர்க்கட்சியில போய் சேர்ந்துட்டாருய்யா....!"
"அடச்சே....நான் வேற... என்னமோ... ஏதோன்னு பயந்துட்டேன்.....!
"என்னய்யா சொல்றீங்க...?"
"யோவ்...சேரச்சொன்னதே நான்தான்யா...."
"அய்யா....!?!?"
"ஸ்ஸ்ஸ்... சத்தம் போடாதய்யா.... வர்ற தேர்தல்ல யாரு ஜெயிப்பாங்கன்னு ஒரே குழப்பமா இருக்குல்ல...அதான் ஆளுக்கொரு கட்சியில இருந்தா....ஆளுங்கட்சியில நம்ம குடும்பம் இருக்கும்ல... அதுமட்டுமில்ல அண்ணண் மகன், அக்கா மகன்னு இருக்குற சொந்தங்களை ஒவ்வொரு கட்சியிலயும் சேரச்சொல்லியிருக்கோம்ல....!!!!"
"அய்யா... தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்குதுங்கல்ல...."
"யோவ்...இப்பவே அடித்தளம் போட்டாத்தான்யா... பில்டிங் ஸ்டிராங்காகும்....இதெல்லாம் உனக்கு புரியாது... போ..போ..போய் வேலைய பாரு..."
"அய்யா...தெய்வமே...நீங்க ஒரு ராஜராஜ தந்திரிய்யா.....!"