எங்கள் ஆட்சியில் மக்கள் சுபிட்சம் -சிரிக்க, சிந்திக்க

எதிர்கட்சித் தலைவர் பத்திரிகைக்கு
அளித்த பேட்டியில் கூறுகையில்
" ஒன்று மட்டும் கூறி பேட்டியை
முடித்துக்கொள்கிறேன், எங்கள்
கட்சியின் ஆட்சியில்தான் மக்கள்
சுபிட்சமாக வாழ்ந்தார்கள்........"

இதற்கு 'மக்கள்' பத்திரிகை மறு நாள்
இப்படி விமர்சனம் தந்தது .

ஐயா ,இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்
என்றையா , மக்கள் சுபீட்சமாய் வாழ்ந்தார்கள்
யார் ஆட்சியில் ...................சரித்திரம் சொல்லும்
சில மன்னர் ஆட்சியில் இருந்திருக்கலாம்.
இந்த காலத்தில் இது சாத்தியமில்லை......
ஏனென்றால், ஆட்சியின் குறுகிய காலத்தில்!
இவர்களால் தங்கள் சுபிட்சம் வளர்த்துக்கொள்ளவே
நேரம் போதவில்லை .........அடுத்துவரும் ஆட்சி
அதுவும் இப்படித்தான் அமையும் ........இது நாட்டின்
தலை எழுத்து போலும்............................

மக்கள் பாவம், கழுதைபோல் இல்லாத வரிகள்
அத்தனையும் தலையில் சுமந்து வண்ணானின்
கழுதைபோல் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல்
அலைகிறார்கள்......................
சுபிட்சம் என்னும் காணலைத்தேடி............

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Sep-18, 4:43 pm)
பார்வை : 91

மேலே