யார் பெரியார்

மூக்கின் மேலே
மூக்கு கண்ணாடி !
மார்பளக்கும்
வெள்ளை தாடி !
கருவிழியிரண்டில்
தீயின் நெடி !
கைப்பிடிக்க
நீண்ட கைத்தடி !
பேச்சும் எழுத்தும்
வெடிக்கும் சரவெடி !
அவ்வளவுதான் - விழுந்தது
பார்பணியத்துக்கும்
மூடநம்பிக்கைக்கும்
சாட்டையடி !
ஏனெனில் ? அவர்தாம்
தந்தை பெரியார் !!!

எழுதியவர் : (20-Sep-18, 8:24 pm)
பார்வை : 96

மேலே